பாஜக, ஆர்.எஸ்.எஸ் சாதிவெறி பிடித்த ஆண் ஆதிக்கவாதிகள்.. அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்தை பகிர்ந்த ராகுல் காந்தி

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தான் எழுதிய சுயசரிதையான ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டார்.
Rahul Gandhi shares Arthnatheswarar sculpture photo
Published on: 
Summary

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் மடியில், அவரின் மனைவி சோனியா அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையான நிலையில், அர்த்தநாரீஸ்வரர் புகைப்படங்களை பகிர்ந்து ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தான் எழுதிய சுயசரிதையான ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டார்.

இதையடுத்து முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மடியில், அவரது மனைவி சோனியா காந்தி அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்களை ராகுல் காந்தி வெளியிட்டார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சைக்குரிய கருத்துகள் எழுந்தன.

இதையடுத்து கணவரின் மடியில், அவரின் மனைவி அமர்ந்திருப்பது கேள்விக்குள்ளாவது குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எகஸ் தளத்தில் பதிவு ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டிருந்தார்.

அவர் அந்த பதிவில், சிவபெருமானின் மடியில் பார்வதி தேவி அமர்ந்திருக்கும் சிற்பத்தின் புகைப்படத்தை பகிர்ந்து, சமூக வலைதளத்தில் எழுந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்திருந்தார்.

மேலும், ஒரு உண்மையான இந்துவாக, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்களை இந்த வலையிலிருந்து விடுவிப்பது என் கடமை என்றும்,

அப்போதுதான் அவர்களும் தங்கள் வாழ்வில் அன்பு மற்றும் சொந்தம் என்ற உணர்வின் பிரமிக்க வைக்கும் அழகையும் ஆனந்தத்தையும் அனுபவிக்க தொடங்குவார்கள் என ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து தான் தனது நண்பர் வீட்டிற்கு சென்றபோது, அவர்களின் பெற்றோர்கள் ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்திருக்காதது தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் எலிபண்டா குகையில் அமைந்துள்ள 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் சிற்பத்தின் புகைப்படத்தை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், இந்திய ஆன்மீக மற்றும் மத மரபுகளில் தான் ஆழமாக செல்ல செல்ல, அது மேலும் தெளிவாக ஆவதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியாவின் ஆன்மீக மற்றும் மத மரபுகளை பற்றி எந்தவிதமான புரிதலும் இல்லாத நாகரிகமற்ற, பேராசை பிடித்த, சாதிய வெறி கொண்ட ஆண் ஆதிக்கவாதிகள் என பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

X