

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் டெல்லி வந்துள்ளார்.
பிரதமர் மோடியும் புதினும் கடந்த வாரம் பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் இடையே கடைசியாக சந்தித்தனர். அந்த சந்திப்பின்போது, மாஸ்கோவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ரஷ்யா-உக்ரைன் மோதலைக் குறிப்பிட்டு, "முடிவற்ற போரில் இருந்து போரின் முடிவை நோக்கி" நகருமாறு பிரதமர் ரஷிய தலைவரை வலியுறுத்தினார்.
"நாம் 'முடிவற்ற போர்' என்ற சூழ்நிலையில் இருந்து 'போர் முடிவு' என்ற நிலைக்கு நகர வேண்டும்... இந்தப் போர் கூடிய விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதே மனிதகுலத்தின் விருப்பம்," என்று பிரதமர் மோடி கூறினார்.
இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவிருக்கும் இந்த கூட்டத்தில், பிரம்மோஸ் ஏவுகணை மேம்பாடுகள் போன்ற பாதுகாப்பு திட்டங்கள் உட்பட, இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரம்மோஸ் ஏவுகணையை மேம்படுத்துவது குறித்து இந்தியாவும், ரஷியாவும் ஆராய்ந்து வருவதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இந்த வார தொடக்கத்தில் தெரிவித்தார். மேலும், ரஷ்யா தனது மீதமுள்ள எஸ்-400 அமைப்புகளை வழங்குவதில் உறுதியாக இருப்பதாகவும், முன்மொழியப்பட்ட எஸ்யு-57 போர் விமானங்களை வழங்குவது குறித்தும் விவாதித்து வருவதாகவும் அவர் கூறினார்.
பிரம்மோஸ் ஏவுகணையை மேம்படுத்துவது குறித்து புது தில்லியும் மாஸ்கோவும் ஆராய்ந்து வருவதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இந்த வாரத் தொடக்கத்தில் தெரிவித்தார். மேலும், ரஷியா தனது மீதமுள்ள எஸ்-400 அமைப்புகளை வழங்குவதில் உறுதியாக இருப்பதாகவும், முன்மொழியப்பட்ட எஸ்யு-57 போர் விமானங்களை வழங்குவது குறித்தும் விவாதித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இந்தியா நடத்தும் இரண்டு நாள் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் புதின் கலந்துகொள்கிறார். ஆண்டுதோறும் நடைபெறும் பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தின் முழு அமர்வில் அவர் உரையாற்றுவார். அதன்பிறகு, பிரதமர் மோடியுடன் இன்னோபிராம் கண்காட்சியை அவர் பார்வையிடுவார்.