

ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் நிகழ்ந்த கோரமான் சாலை விபத்தில் 4 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உட்ப்ட மொத்தம் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குந்தி மாவட்டம், கர்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்ரா-டோர்பா பிரதான சாலையில் உள்ள ஜோனே-லுத்ரு வளைவு அருகே இந்த விபத்தானது நிகழந்துள்ளது.
குறிப்பாக இந்த விபத்தில் இரண்டு குடும்பங்களை சேரந்த உறுப்பினர்கள் முற்றிலுமாக உயிரிழந்துள்ளனர்.குஷ்பு குமாரி என்ற சிறுமி பலத்த காயங்களுடன் குந்தி =மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்த செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
என்று தெரிவித்துள்ளார்