

ஜார்கண்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர்.
ஜார்கண்டின் குந்தி மாவட்டத்தில் கர்ரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று இரவு இரவு 9:45 மணியளவில் விபத்து ஏற்பட்டது.
அந்தப் பகுதியில் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்ற ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள புதருக்குள் விழுந்துள்ளார். இதைக் கவனித்த அப்பகுதி பெண்களும் குழந்தைகளும் அவருக்கு உதவ சாலையோரத்தில் கூடினர்.
அப்போது டோர்பா பகுதியிலிருந்து அதிவேகமாக வந்த லாரி, சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சையின் போது 12 வயது சிறுவன் சௌரவ் நாயக் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
பலியானவர்களில் பகோ தேவி, கசிலா தேவி, மஞ்சு தேவி, கோலு குமார், அஞ்சலி குமாரி, துதி குமாரி மற்றும் 12 வயது சிறுவன் சௌரவ் நாயக் ஆகியோர் அடங்குவர்.
குஷ்பு குமாரி என்ற பெண் படுகாயங்களுடன் குந்தி சதாார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தை ஏற்படுத்திய லாரியின் ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விபத்து நடந்தவுடன் லாரி ஓட்டுநரும் அவரது உதவியாளரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவான உள்ள லாரி ஓட்டுனரையும் உதவியாளரையும் தேடி வருகின்றனர்.