ராகுல் காந்திக்கு அரசியல் மறதி நோய்- ஒவைசி கடும் தாக்கு

நாங்கள் செகந்திராபாத் லோக்சபா தொகுதியில் போட்டியிடவில்லை. 2019 லோக்சபா தேர்தலில் நாங்கள் உத்தரபிரதேசத்தில் 3 எம்.பி. தொகுதியில் போட்டியிட்டோம்.
ராகுல் காந்திக்கு அரசியல் மறதி நோய்- ஒவைசி கடும் தாக்கு
Published on

திருப்பதி:

ஐதராபாத் எம்.பி ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியை ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார்.

ஒவைசி பா.ஜ.க.வின் பி டீம் பா.ஜ.க வேட்பாளர் போட்டியிடும் இடங்களில் ஏ.ஐ.எம்.ஐ.எம் வேட்பாளர் நிறுத்தப்படுவார் இதன் மூலம் பா.ஜ.க எளிதில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்து ஒவைசி, கூறுகையில் :-

ராகுலுக்கு அம்னீசியா என்ற அரசியல் மறதி நோய் உள்ளது. அவர் எளிதில் மறந்து விடுவார். நாங்கள் செகந்திராபாத் லோக்சபா தொகுதியில் போட்டியிடவில்லை. அங்கு பா.ஜ.க. வேட்பாளர் கிஷன் ரெட்டி வெற்றி பெற்றார்.

இதில் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்ததா? 2019 லோக்சபா தேர்தலில் நாங்கள் உத்தரபிரதேசத்தில் 3 எம்.பி. தொகுதியில் போட்டியிட்டோம்.

ஆனால் அமேதியில் போட்டியிடவில்லை. அமேதியில் ஸ்மிருதி ராணியிடம் ராகுல் தோல்வி அடைந்தார். அங்கு ஸ்மிருதி ராணியிடம் ராகுல் பணம் வாங்கினாரா? குஜராத்தில் பா.ஜ.க ஏன் வெற்றி பெறுகிறது. எவ்வளவு பணம் வாங்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com