போதையில்லா இந்தியாவை உருவாக்குவோம்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு!

சுவநிதி திட்டம் மூலம் 35 லட்சம் பெண்கள் சுயதொழில் வளர்த்து வலிமை பெறுகின்றனர்
MannKi Baat
Published on
Summary

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி (மன் கி பாத்) மூலம் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார். இன்று தனது 137-வது பதிவில் பிரதமர் மக்களின் நலன் கருதி பேசியுள்ளார்.

உள்நாட்டு பொருட்கள்

மனதின் குரல் நிகழ்ச்சியை பல்வேறு மாநில முதல்வர்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். வரலாறு தொடர்பாக விவரங்களை எளிதாக பெற இணைய தளம் உருவாக்கப்பட்டது. ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், சேர ராஜ்ஜியம் குறித்து இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்டிகை நாட்களில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க வேண்டும். உள்நாட்டு பொருட்கள் குறித்து நாம் பெருமைபட வேண்டும்.

மகளிருக்கு உதவி

தெருவோர வியாபாரிகளுக்கான நலத்திட்டமான பிரமதரின் சுவனதி திட்டம் மகளிருக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்தி மகளிர் சுய தொழில்களை வளர்க்கிறார்கள்.

இந்த திட்டம் மூலம் லட்சக்கணக்கான தாய்மார்களும், சகோதரிகளும் புதிய வலிமையை பெறுகிறார்கள்.

இந்த திட்டத்தின் பயனாளிகளில் 46 சதவீதம் பேர் பெண்கள். அதாவது நாடு சுமார் 35 லட்சம் பெண்கள் தங்கள் தொழிலை மேம்படுத்த இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.

தூய்மை இந்தியா திட்டம் இளைஞர்களின் முன்னெடுப்பால் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியுள்ளது. அமர்நாத் யாத்திரையிலும் தூய்மை பணிகள் முக்கிய இடம் பிடித்தது.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் மாணவிகள் செயற்கைகோள் தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்தனர்.

போதை பொருள் இல்லாத நாடு

இந்தியாவை போதை பொருள் இல்லாத நாடாக மாற்ற மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

போதை பொருள் பயன்பாட்டு அச்சுறுத்தலில் இருந்து நாட்டை விடுவிக்கவும், இளைஞர்களுக்கு வலுவான எதிர்காலத்தை உருவாக்கவும் ஒன்றிணைய வேண்டும்.

‘வளர்ந்த இந்தியாவுக்கான போதை பொருள் இல்லாத இளைஞர்கள்’ என்ற பிரசாரம் நாடு முழுவதும் வேகம் பெற்று வருகிறது. இதன் நோக்கம் தெளிவானது.

போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் முயற்சி, போதை பொருள் தேவையை குறைப்பதற்கான தேசிய செயல்திட்டத்தின் கீழ் 2020 ஆகஸ்டு 15-ந் தேதி அன்று தொடங்கப்பட்ட அரசின் ஒரு முக்கிய முன் முயற்சியாகும்.

பிரசாரம்

இந்த பிரசாரமானது விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சமூக பங்கேற்பு, சிகிச்சை மறுவாழ்வு, தொடர் பராமரிப்பு ஆகியவற்றின் மூலம் போதை பொருள் பயன்பாட்டை தடுப்பதையும், அதற்கு எதிரான நாடு தழுவிய இயக்கத்தை வளர்ப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது என்று பேசியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com