

ஒரு பாதுகாப்பான வங்கி அமைப்புக்கு, வலுவான டேட்டா சென்டர்கள் (தரவு மையங்கள்) மற்றும் சக்திவாய்ந்த கணினி அமைப்புகளால் ஆதரிக்கப்படும் பாதுகாப்பான டிஜிட்டல் உள்கட்டமைப்பு தேவை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரிசர்வ் வங்கியின் டேட்டா சென்டர் மற்றும் இணைய பாதுகாப்பு பயிற்சி நிறுவனத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி இவ்வாறு பேசினார்.
தனது உரையில், இந்தியாவின் டிஜிட்டல் நிதி உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், அதன் தொழில்நுட்ப தன்னிறைவை மேம்படுத்துவதிலும் இந்த தரவு மையம் மற்றும் இணைய பாதுகாப்பு பயிற்சி நிறுவனத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் எடுத்துரைத்தார்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், இணைய பாதுகாப்பை மேம்படுத்துதல், உள்நாட்டு தொழில்நுட்ப திறன்களை வளர்த்தல் மற்றும் 2047-ஆம் ஆண்டுக்குள் ஒரு வளர்ந்த நாடாக மாறுவதற்கான நாட்டின் இலட்சியத்திற்கு ஆதரவளித்தல் ஆகியவற்றில் மத்திய வங்கியின் அர்ப்பணிப்பை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி நிலைத்தன்மையை பாதுகாப்பதிலும், நீடித்த பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதிலும் வலுவான உள்கட்டமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இந்த புதிய டேட்டா சென்டர், ஆர்.பி.ஐ.-இன் மிக முக்கியமான செயல்பாட்டு அமைப்புகளான ஆர்.டி.ஜி.எஸ். மற்றும் என்.இ.எஃப்.டி. ஆகியவை இடம்பெறும் என்றும், அதே சமயம் பயிற்சி நிறுவனம் சைபர் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த நிபுணத்துவத்தை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.