விமானி ஸ்மித் மச்சாரிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த பிரதமர் மோடி

இந்திய விமானிக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, அமெரிக்க அதிபர் டிரம்ப், பாராட்டு.
Smith machar- PM Modi
Published on: 
Summary

துபாய் விமானத்தில் 180 பயணிகளின் உயிரை காப்பாற்றிய கேப்டன் ஸ்மித் மச்சாரிடம் தொலைபேசியில் பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார்.

நடுவானில் நாசகார வேலையில் ஈடுபட முயன்ற சக விமானியிடம் இருந்து கத்திக்குத்து வாங்கி விமானத்தில் இருந்த 180 பேரின் உயிர் காத்த இந்திய விமானி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை நோக்கி 180 பயணிகளுடன், போயிங் 737 மேக்ஸ் 8 என்ற ப்ளை துபாய் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் காலை புறப்பட்டது.

விமானம் கிளம்பி சில மணி நேரத்தில் இந்தியாவை சேர்ந்த ஒரு விமானியுடன், ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானியும் சண்டை பிடித்துள்ளார். ஓமன் நாட்டு விமானி விமானத்தை கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

பாராட்டுகள்

பயணிகள் விமானத்தை கடத்த முயன்ற பயங்கரவாதியிடம் இருந்து 180 பயணிகளின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானிக்கும் துணிச்சலாக செயல்பட்ட பயணி மற்றும் பணியாளருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

குறிப்பாக கத்திக்குத்து காயம் பெற்று தற்போது சவுதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய விமானிக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த ஒருவர் பலரின் தன் உயிரை பணயம் வைத்து பலரின் உயிரை காப்பாற்றியது இந்தியர்களை பெருமை கொள்ள செய்துள்ளது.

நலம் விசாரிப்பு

விமானி ஸ்மித் மச்சாரிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, கத்தியால் குத்தப்பட்ட நிலையில் துணிச்சலுடன் பயணிகளை காப்பாற்றியது குறித்து ஸ்மித் மச்சாரியிடம் கேட்டறிந்தார்.

மேலும், ஸ்மித் மச்சார் விரைவில் குணமடைய விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com