தாதா சாகேப் பால்கே விருது பெறும் ஆனந்த் நாக்: பிரதமர் மோடி வாழ்த்து

கடந்த ஆண்டு கேரளாவின் மோகன்லால் தாதா சாகேப் பால்கே விருது பெற்றார்.
pm modi
Published on
Summary

தாதாசாகேப் பால்கே விருது பெறவுள்ள நடிகர் அனந்த் நாக்-க்கு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியத் திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது.

தாதா சாகேப் பால்கே விருது

2024-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது கன்னட நடிகர் ஆனந்த் நாக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவிற்கு அவர் அளித்த பங்களிப்புக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் கெவாடியாவில் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த உயரிய விருது நடிகர் அனந்த் நாக்கிற்கு வழங்கப்படவுள்ளது.

கடந்த ஆண்டு கேரளாவின் மோகன்லால் தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தாதாசாகேப் பால்கே விருது பெறவுள்ள நடிகர் ஆனந்த் நாக்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து

இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

தாதா சாகேப் பால்கே விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற கலைஞர் ஆனந்த் நாக் அவர்களுக்கு வாழ்த்துகள்.

அவரது இயல்பான நடிப்பு, பன்முகத்தன்மை மற்றும் அபாரத் திறமை ஆகியவை இந்தியத் திரையுலகிலும், கன்னடத் திரையுலகிலும் ஆழமான முத்திரையைப் பதித்துள்ளன.

அவரைப் போன்ற மிகச் சிறந்த கலைஞருக்கு இது மிகவும் தகுதியான ஒரு கவுரவமாகும் என பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com