

ஒடிசாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், ஐ.டி. நிறுவனத்தில் பார்த்து வந்த வேலையை உதறிவிட்டு செய்துவிட்டு பெங்களூருவில் ரேபிடோ பைக் ஓட்டி வருகிறார். இதற்கு பின்னால் வித்தியாசமான தொழில் திட்டம் இருப்பதை பகிர்ந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
ஒடிசாவை சேர்ந்த இளைஞர் ஒருவரின் குடும்பத்திற்கு சொந்தமாக பால் பண்ணை உள்ளது.இந்த தொழிலை விரிவுப்படுத்துவதற்காக தான் பணிபுரிந்து வந்த ஐடி வேலையை உதறிவிட்டு, சொந்த தொழிலை தேர்ந்தெடுத்துள்ளார்
இதற்காக உடனடியாக முதலீடு செய்து தொழிலை தொடங்குவதற்கு பதிலாக, முதலில் சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் விருப்பங்களையும் தெரிந்துகொள்ள முடிவு செய்துள்ளார்.
இதற்காகவே பெங்களூரு வந்த அவர், NPCI-யில் பார்த்து வந்த ஐ.டி. வேலையை விட்டுவிட்டு ரேபிடோ பைக் ஓட்டத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஐ.டி. துறையில் பணியாற்றுபவர்களிடம் பயணத்தின்போது பேசி, அவர்கள் எந்த வகையான பால் பொருட்களை வாங்குகிறார்கள், அவர்களின் தேவைகள் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வதற்காக இதை தேர்ந்தெடுத்தாக தெரிவித்துள்ளார்.
ஒரு வருடம் பெங்களூருவில் இருந்து வாடிக்கையாளரின் கருத்துகளை சேகரித்து, அதன் அடிப்படையில் தனது தொழில் திட்டத்தை தயாரிக்க அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரிடம் ஒருவர் கேட்டபோது, இப்படி செய்தால் பணமும் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் கருத்தும் கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இவரது இந்த வித்தியாசமான அணுகுமுறை குறித்து லிங்க்ட்இனில் பதிவிட்ட வருண் ராஜ் என்பவர் பாரம்பரிய சந்தை ஆய்வுகளை மட்டும் நம்பாமல், நேரடியாக வாடிக்கையாளர்களிடம் பேசி அவர்களின் தேவைகளை தேவைகளை அறிந்து கொள்வது பாராட்டுக்குரியது என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
ஒரு தொழிலை தொடங்குவதற்கு முன்பே, வாடிக்கையாளர்களிடம் நேரடியாக கருத்துகளை கேட்டு, அதே நேரத்தில் வருமானமும் ஈட்டும் ஒடிசா இளைஞரின் முயற்சி பலரையும் கவர்ந்துள்ளது.