வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

என்விஎஸ்-03 (NVS-03) செயற்கைக்கோளானது உள்நாட்டில் உருவாக்கப்பட அணு கடிகாரத்தை விண்வெளிக்கு சுமந்து செல்கிறது.
Modi - ISRO
Published on: 
Summary

இஸ்ரோ விஞ்ஞானிகள் என்விஎஸ் 03 செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜிஎஸ்எல்வி-எஃப்18 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதை தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

என்விஎஸ்-03 (NVS-03) செயற்கைக்கோளானது உள்நாட்டில் உருவாக்கப்பட அணு கடிகாரத்தை விண்வெளிக்கு சுமந்து செல்கிறது.

இந்த வகையான அணு கடிகாரங்கள் துல்லியமான இருப்பிடத்தை கண்டறியவும், நேரத்தை கணிக்கவும் மற்றும் தேவையான சமிக்ஞைகளை வழங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக் கோளானது இந்திய ராணுவத்திற்கு எல்லைகளில் வழிகாட்டவும், போர் விமானங்கள் மற்றும் கடற்படைகள் மூலம் துல்லியமான இருப்பிடத்தை கண்டறிந்து ஏவுகணைகளை செலுத்தவும் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்தியா கடந்த காலங்களில் வெளிநாட்டு செயற்கைக்கோள் வழிசெலுத்துதல் அமைப்புகளை சார்ந்திருந்தது.

இதையடுத்து தற்போது ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோளானது இந்தியா முழுவதும் மற்றும் அதன் புவியியல் எல்லைகளுக்கு அப்பால் 1,500 கிலோமீட்டர் வரை சேவை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “NVS-03 செயற்கைக்கோளை சுமந்து சென்ற GSLV-F18 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக, இஸ்ரோவின் விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் வாழ்த்துகள்.

இந்த திட்டம், நமது உள்நாட்டு செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பான NavIC-ஐ வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய படியை குறிக்கிறது.

மேம்படுத்தப்பட்ட திறன்களுடன் கூடிய NVS-03, முக்கிய தொழில்நுட்பங்களில் தற்சார்பு அடையும் நமது பயணத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதோடு, நமது மக்களுக்கு பயனளிக்கும் வழிசெலுத்தல் சேவைகளுக்கும் துணைபுரியும்.

நமது விண்வெளி விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பும் புத்திசாலித்தனமும் தொடர்ந்து நமது தேசத்தைப் பெருமைப்படுத்துகின்றன” என பதிவிட்டுள்ளார்.

X