பிரதமராக பதவியேற்ற மோடி.. கொண்டாட்டத்தில் பற்றி எறிந்த பா.ஜ.க அலுவலகம்

நேற்று (ஜூன் 9) இரவு 7.15 மணிளவில் பிரதமராக மோடி 3-வது முறையாகப் பதவியேற்றுள்ளார்.மோடி மீண்டும் பிரதமரான குஷியில் நாடு முழுவதும் பாஜகவினர் வெற்றிகொண்டாட்டத்தில் ஆரவாரித்து வருகின்றனர்.
பிரதமராக பதவியேற்ற மோடி..  கொண்டாட்டத்தில் பற்றி எறிந்த பா.ஜ.க அலுவலகம்
Published on

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றிய நிலையில் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது. என்.டி.ஏ புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து நேற்று (ஜூன் 9) இரவு 7.15 மணியளவில் பிரதமராக மோடி 3-வது முறையாகப் பதவியேற்றுள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மோடிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 72 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். ராஜ்நாத் சிங், ஜே.பி நட்டா, அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி உள்ளிட்டோர் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் மோடி மீண்டும் பிரதமரான குஷியில் நாடு முழுவதும் பாஜகவினர் வெற்றிகொண்டாட்டத்தில் ஆரவாரித்து வருகின்றனர். அந்த வகையில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பாஜக கட்சி அலுவலகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது அலுவலகத்தின் மேல் தலத்தில் தீப்பற்றி மற்ற பகுதிகளுக்கும் மளமளவெனப் பரவியது. சம்பவ இடத்துக்கு உடனே விரைந்த தீயணைப்புத் துறை போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.   

X

Maalai Malar
www.maalaimalar.com