வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.. முருகப்பெருமான் அதர்மத்தை அழித்து ஞானத்தை அருளட்டும்: அமித் ஷா

இன்று மாலை 5:00 மணிக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் முன்னிலையில், சுப்பிரமணிய சுவாமி கோவிலின் தீபத்தூணில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
Madurai Thirupparankundram - Amit Shah
Published on: 
Summary

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலின் தீபத்தூணில் இன்று மகாதீபம் ஏற்றப்பட்டுள்ள நிலையில், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரான் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நவம்பர் 24 அன்று கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட்ட போது, அந்த தினத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகாதீபம் ஏற்றும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் பாஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, நவம்பர் 24 அன்று திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு ஒரு முறை மட்டுமே அனுமதியளிப்பதாக தீர்ப்பளித்தனர்.

இதையடுத்து உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட தீபத்தூணில் தீபம் ஏற்றாமல், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள உச்சி பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது.

இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் வேறு இடத்தில் தீபம் ஏற்றப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, சி.ஆர்.பி.ஏஃப் வீரர்களின் உதவியோடு இன்று மீண்டும் தீபம் ஏற்றும்படி உத்தரவிட்டனர்.

இதையடுத்து இன்று மாலை 5:00 மணிக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் முன்னிலையில், சுப்பிரமணிய சுவாமி கோவிலின் தீபத்தூணில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அமித் ஷா

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா!

முருகப்பெருமான் தனது வெற்றிவேல் கொண்டு தீய சக்திகளை அழிக்கிறார், கார்த்திகை தீபத்தின் ஒளி எல்லா இருளையும் அகற்றுகிறது.

முருகப்பெருமான் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்வாழ்வு மற்றும் செழிப்பையும், அதர்மத்தை அழித்து ஞானத்தையும் அருளட்டும்” என பதிவிட்டுள்ளார்.

X