ஐக்கிய அரபு அமீரக சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கேரள முதல்வர் இரங்கல்

உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் 'நோர்கா ரூட்ஸ்' (NORKA ROOTS) அமைப்பிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
V D Satheesan
Published on: 

ஐக்கிய அரபு அமீரக ஏற்ப்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கேரள முதல்வர் வி.டி சதீஷன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சுற்றுலா சென்றிருந்த மலப்புரத்தைச் சேர்ந்த மலையாளி குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், புதன்கிழமை நள்ளிரவு ஃபுஜைராவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் முஹம்மது அஸ்மில் (21), மிஸ்னா ஜுபின் (21) மற்றும் முஹம்மது ஃபாயிஸ் (3) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். முதற்கட்ட அறிக்கைகளின்படி, லாரி கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கேரள முதல்வர் வி,டி சதீஷன் இரங்கல் தெரிவித்துள்ளார். .இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டிள்ளதாவது

ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைராவில் நிகழ்ந்த சாலை விபத்தில், மலையாளி குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. உயிரிழந்த முஹம்மது அஸ்மில், அவரது இரட்டைச் சகோதரி மிஸ்னா ஜுபின் மற்றும் முஹம்மது ஃபாயிஸ் ஆகியோர் மலப்புரம், வெங்கராவைச் சேர்ந்தவர்கள்.

இந்த அளப்பரிய துயரச் சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். துயருற்ற குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும், உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் 'நோர்கா ரூட்ஸ்' (NORKA ROOTS) அமைப்பிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X