

கேரளம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பினராயி விஜய் ஆட்சிக் காலத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு தனிப்பட்ட பணியாளர் 787 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர் என்று தற்போதை முதலமைச்சர் வி.டி. சதீசன் குறிப்பிட்டிருந்தார். ஆனால், பினராயி விஜய் இந்த குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.
இந்த நிலையில், நான் சொன்னது உண்மை. இந்த உறுதியாக இருக்கிறேன் என்ற வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் சதீசன் கூறியிருப்பதாவது:-
பெயர்களை மட்டுமல்ல, தனிப்பட்ட பணியாளர்களின் முகவரி உள்பட அனைத்து விவரங்களையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த நியமனம் 2021-ம் ஆண்டில் இருந்து 2026-ம் ஆண்டு வரை நடைபெற்றுள்ளது.
முதலமைச்சர் சமூக வலைத்தளங்களை கையாள்வதாக கூடுதலாக 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 22,290 ரூபாயில் இருந்து 75 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மாதத்திற்கு 7 லட்சம் ரூபாய்க்கு மேலும், வருடத்திற்கு 84 லட்சம் ரூபாயும் சமூக வலைத்தளங்களை கையாள்வதற்காக மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது.
இதை எல்லாம் செய்தவர்கள் தற்போது எங்களது அரசை இழிவுப்படுத்த முயற்சிக்கிறது. எங்களுடைய அரசு குறிப்பிட்ட வரையறையை மீறவில்லை. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கான 478 தனிப்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சதீசன் குறிப்பிட்டுள்ளார்.