கர்நாடகா அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய மந்திரி ஒருவர் முயற்சி - பிரியங்க் கார்கே குற்றச்சாட்டு!

பிரியங்க் கார்கே மறைமுகமாக குமாரசாமியை குறிவைத்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
Priyank Kharge
Published on: 
Summary

கர்நாடகா மாநிலத்தில் டி.கே.சிவக்குமார் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயின் மகன் பிரியங்க் கார்கே மந்திரியாக இருக்கிறார்.

மத்திய மந்திரி மீது குற்றச்சாட்டு

இந்த நிலையில் தனக்கும் சக மந்திரிகளுக்கும் எதிராக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க மத்திய மந்திரி ஒருவர் மோடி அரசை வற்புறுத்தி வருகிறார் என்று பிரியங்க் கார்கே குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது,

கர்நாடகா பொதுப் பணித்துறை தேர்வாணைய பணி நியமனத்தில் நடந்து உள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்த விசாரணையை எனக்கும் சக மந்திரிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய மந்திரி ஒருவர் முயற்சித்து வருகிறார். அரசியல் கவசமாக அவர் இதை பயன்படுத் துகிறார். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை ஒரு ஆயுதமாக பயன்படுத்த மோடி அரசை தீவிரமாக வற்புறுத்தி வருவதாக பேச்சு அடிபடுகிறது.

அமலாக்கத்துறை மூலம் மிரட்டல்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் புதிய குரூப் பணியாளராக செயல்படும் அந்த நபர் கர்நாடகா பொதுப் பணித்துறை தேர்வாணைய பணி நியமன வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் அமலாக்கத்துறையை பயன்படுத்தி மிரட்டுகிறார்.

இதன் மூலம் காங்கிரஸ் தலைவரையும், என்னையும் இந்த வழக்கில் பொய்யாக சிக்க வைக்க முயற்சிப்பதாக தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.

பிரியங்க் கார்கே தனது பதிவில் யாரையும் நேரடியாக குறிப்பிடவில்லை. ஆனாலும் அவரது இந்த குற்றச்சாட்டு பா.ஜ.க. கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதா தள தலைவரும், மத்திய மந்திரியுமான குமாரசாமியை நோக்கியே இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

X