ஜார்க்கண்ட் : எஃகு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

எஃகு தொழிற்சாலையில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர்.
Jharkhand Steel Plant Fire
ஜார்கண்ட் எஃகு தொழிற்சாலை தீ விபத்து
Published on

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள எஃகு தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், உடல் முழுவதும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று ஊழியர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

எஃகு தொழிற்சாலையில் தீ விபத்து

ஜார்க்கண்ட்டின் ராம்கர் மாவட்டத்தில் உள்ள ஹெலால் பகுதியில் மா சின்னமஸ்திகா இஸ்பாட் எஃகு தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இயங்கி வந்த மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று இரவில் தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து தொழிற்சாலை ஊழியர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு விரைந்த வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் இதுவரையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பல ஊழியர்கள் தொழிற்சாலையின் உள்ளே சிக்கி கொண்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து ராம்கர் காவல் கண்காணிப்பாளர் முகேஷ் குமார் லுனாயத் கூறுகையில், “இந்த தீ விபத்தில் நான்கு ஊழியர்கள் உடல் முழுவதும் ஏற்பட்ட பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தீ விபத்துக்கான சரியான காரணம் தெரியவில்லை. அதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்” என்று கூறினார்.

மூன்று ஊழியர்கள்

எஃகு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பர்கானா காவல் நிலைய பொறுப்பாளர் உமா சங்கர் வர்மா கூறுகையில், இறந்தவர்கள் சஞ்சீவ், வினீத் மற்றும் அபிஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் மாவட்டத்தில் இயங்கி வரும் தொழிற்சாலையின் தலைமை தொழிற்சாலை ஆய்வாளர் மனிஷ் சின்ஹா கூறும்போது, தொழிற்சாலை ஆய்வாளர் மற்றும் சோட்டாநாக்பூர் துணைத் தலைமை ஆய்வாளர் அடங்கிய இரண்டு பேர் கொண்ட குழு, விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com