ஜார்கண்ட்: முதல்வர் ஹேமந்த் சோரனும் அவரது மனைவியும் சட்டமன்ற தேர்தலில் போட்டி

ஜார்கண்டில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் 70 தொகுதிகளில் போட்டியிடுகின்றனதேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன
Hemant Soran and his wife
Published on

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20 தேதிகளில் இரு கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றன.

ஜார்கண்டில் உள்ள 81 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் 70 தொகுதிகளிலும், ஆர்.ஜே.டி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இதர தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 35 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வெளியிட்டுள்ளது. முதல்வர் ஹேமந்த் சோரன் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக உள்ள பர்ஹைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரது மனைவி கல்பனா சோரன் காண்டே தொகுதியிலும் ஹேமந்த் சோரனின் சகோதரரான பசந்த் சோரன் தும்கா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com