சௌரவ் தாஸ் இந்தியரா? மத்திய அரசு 6 வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் 6 வாரங்களுக்கு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
Saurav Das
Published on: 

கரப்பான் ஜனதா கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸின் இந்தியரா என உள் துறை அமைச்சகம் விசாரிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில்மத்திய அரசு 6 வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (CJP) இணை ஒருங்கிணைப்பாளரும் பத்திரிகையாளருமான சௌரவ் தாஸின் குடியுரிமை மற்றும் பின்னணி குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரிக்கக் கோரிய பொதுநல வழக்கில், மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் 6 வாரங்களுக்கு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

சென்னை ஜமீன் பல்லவரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆர். கணேஷ்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ். ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு இன்று விசாரித்தது.

சௌரவ் தாஸின் உண்மையான பெயர் யோகேஷ் சர்மா என்றும், அவருக்கு நேபாளத்தின் பின்னணி என்றும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் தனது அடையாளங்களை மறைத்து, இந்தியாவில் போலி ஆவணங்கள் மூலம் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை முறைகேடாகப் பெற்றுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

சௌரவ் தாஸின் குடியுரிமை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அவரது பாஸ்போர்ட் மற்றும் ஆதார் அட்டையை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதித்துறை குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பியதாகக் கூறப்படும் நிலையில், சௌரவ் தாஸின் எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை முடக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சௌரவ் தாஸ் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

X