கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இணையதளம் ஒரு வெற்று நாடகம் போலவே உள்ளது - பாப் பாடகர் காட்டம்

இணையத்தில் அரசியல் நிகழ்வுகள் குறித்து கேள்வி எழுப்பி வந்த சிஜேபி கட்சி குறித்து பாடகர் சாந்தி ஷர்மா வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இணையதளம் ஒரு வெற்று நாடகம் போலவே உள்ளது - பாப் பாடகர் காட்டம்
Published on

அமெரிக்காவைச் சேர்ந்த அபிஜீத் தீப்கே, கடந்த வாரம் காக்ரோச் ஜனதா தளம் என்ற கணக்கை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பக்கத்தில் தொடங்கினார். இந்த கணக்கு தன்னை சோம்பேறிகள் மற்றும் வேலையில்லாதவர்களின் குரல் என்று அறிவித்து கொள்கிறது.

தலைமை நீதிபதிகள் ஓய்வுக்குப் பிறகு மாநிலங்களவை உறுப்பினர்களாவதற்கு தடை, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு, கட்சி மாறுபவர்களுக்கு 20 ஆண்டு காலத் தடை, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஜேபி கட்சி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வந்தது.

இந்த கணக்கு தொடங்கிய ஒரு வார காலத்திற்குள் 1 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை பெற்று, இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சிஜேபி கணக்கு முடக்கப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து இந்திய ராப் பாடகரான சாந்தி ஷர்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஒரு தீவிரமான இயக்கத்தை விட இணைய நாடகம் போலவே உள்ளது. சிஜேபி-யின் நிறுவனர் தீப்கே, ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடையவர்.

தங்களை தேசியவாதியாக சொல்லிக்கொள்பவர்கள் ஜென் Z தலைமுறையை உணர்ச்சிவசப்படுத்தி போராட்டங்களுக்கு தூண்டுவதற்கு பதிலாக, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி போன்ற உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

பாஜக உட்பட எந்தவொரு கட்சியும் குறைகள் இல்லாமல் இல்லை. தேவையற்ற ஸ்திரத்தன்மையை உருவாக்குவதும், இணையவழிப் பிரச்சாரமும் இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவாது” என்று பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com