டெல்லி உயர் நீதிமன்றத்தில் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா முறையீடு: காவல்நீட்டிப்பு உத்தரவுக்கு எதிராக அவசர மனு தாக்கல்

கைது செய்யப்பட்ட இருவருக்கும் ஆரம்பத்தில் ஐந்து நாட்கள் நீதித்துறை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
Saurav Das-Ashutosh Ranga
Published on: 
Summary

காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்களான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோரின் காவநீட்டிப்பு உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்களான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோரின் காவநீட்டிப்பு உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற போராட்டம் தொடர்பான வழக்கில், சிறப்பு நிர்வாக நடுவர் நீதிமன்றம் இவர்களது சிறைக் காவலை நீட்டித்ததை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், இவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரி அவசர கால அடிப்படையில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் உள்ள முறைகேடுகளைக் கண்டித்து சிஜேபி அமைப்பு சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட ஜந்தர் மந்தர் பகுதிக்குள் நுழைந்து தேசியக் கொடியை ஏந்த முயன்றதாகக் கூறி, கடந்த அக்டோபர் 13ஆம் தேதி டெல்லி காவல்துறையினர் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோரை அதிரடியாகக் கைது செய்தனர். முன்னதாக அமைதி காப்பதாகச் சமர்ப்பிக்கப்பட்ட பிணைப் பத்திரத்தின் நிபந்தனைகளை மீறியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

காவல் நீட்டிப்பு

கைது செய்யப்பட்ட இருவருக்கும் ஆரம்பத்தில் ஐந்து நாட்கள் நீதித்துறை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்தக்காலம் முடிந்த நிலையில், கடந்த அக்டோபர் 19ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில், அவர்களின் காவலை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டித்து சிறப்பு நிர்வாக நடுவர் உத்தரவிட்டார். சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்காவின் தொடர் செயல்கள் சட்டத்தின் மீது மதிப்பற்ற தன்மையைக் காட்டுவதாகவும், இதனால் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்க வாய்ப்புள்ளதாகவும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. மேலும், அவர்கள் சார்பாகச் சமர்ப்பிக்கப்பட்ட பிணையாளர் ஆவணங்களில் குளறுபடிகள் இருந்ததால் அவற்றையும் நீதிமன்றம் நிராகரித்தது.

தலைவர்களின் காவல்நீட்டிப்பு நீடிக்கப்பட்டு வருவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், அதிகாரிகளைத் பயன்படுத்தி அரசு வேண்டுமென்றே வழக்கை நீர்த்துப்போகச் செய்வதாகவும் சிஜேபி அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. விசாரணையை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் நோக்கில் பல்வேறு தத்தளிப்புகள் உருவாக்கப்படுவதாகக் கட்சித் தரப்பு வழக்கறிஞர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில், சிறப்பு நிர்வாக நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவைச் செல்லாது என அறிவிக்கக் கோரியும், இரு தலைவர்களையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக இதனைத் தாக்கல் செய்து முறையிட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com