ஆசிய பாரா விளையாட்டில் சாதனை படைத்தது இந்தியாவின் சிறந்த நிலைப்பாடு- பிரதமர் மோடி

வெற்றியின் மூலமாக கணக்கில்லாத இந்தியர்களுக்கு அவர்கள் உத்வேகத்தை அளித்துள்ளார்கள்.
PM Modi
Published on: 

5-வது ஆசிய பாரா விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி-நகோயா நகரில் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. நேற்றுடன் போட்டி நிறைவடைந்தது.

இந்தியாவுக்கு 114 பதக்கம்

ஆசிய பாரா விளையாட்டு போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்தது. 30 தங்கம், 35 வெள்ளி , 49 வெண்கலம் ஆக மொத்தம் 114 பதக்கம் கிடைத்தது. கடந்த முறையை விட இந்தியா தற்போது அதிக பதக்கங்களை குவித்து புதிய சாதனை படைத்தது.

கடந்த 2023-ம் ஆண்டு சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டில் 108 பதக்கம் கிடைத்தது. இதுவே சிறந்த நிலையாக இருந்தது. இதை தற்போது இந்தியா முறியடித்தது.

மேலும், முதல் முறையாக 4-வது இடத்தை பிடித்து இந்தியா சாதனை படைத்தது. கடந்த முறை 6-வது இடத்தை பிடித்ததே சிறந்த நிலையாக இருந்தது.

பிரதமர் மோடி வாழ்த்து

இந்தநிலையில் ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

114 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தது இந்தியாவின் சிறந்த நிலை என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இது குறித்து இன்று காலை அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியி ருப்பதாவது:-

மகத்தான சாதனை

2026 ஆசிய பாரா விளையாட்டு போட்டியை நமது மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் மகத்தான சாதனையுடன் நிறைவு செய்துள்ளார்கள்.

114 பதக்கங்களுடன் சாதனை படைத்துள்ளார்கள். இதுதான் இந்தியாவின் மிகச்சிறந்த செயல்பாடு. இந்த நிகழ்வு ஒட்டுமொத்த நாட்டிற்கும் மகிழ்ச்சியும் மிகுந்த பெருமையும் அளித்துள்ளது.

தனித்துவமான விடா முயற்சியுடன் விளையாடிய ஒவொரு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் எனது வாழ்த்துகள். ஒவ்வொரு தடகள வீரர், வீராங்கனைகளும் இந்த வரலாற்றுச் சாதனையில் பங்களித்துள்ளார்கள்.

தங்களது வெற்றியின் மூலமாக கணக்கில்லாத இந்தியர்களுக்கு அவர்கள் உத்வேகத்தை அளித்துள்ளார்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com