

தீ விபத்து சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், பெரும் சொத்து சேதம் ஏற்பட்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், குக்கட்பள்ளியில் இன்று அதிகாலை, காகித தேநீர் கோப்பை மற்றும் தட்டு தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீ, நெய், குர்குரே மற்றும் ஹல்திராம் கிடங்குகளுக்கும் பரவி, தொடர்ந்து தீவிரமாக எரிந்தது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயைக் கட்டுப்படுத்த முயன்றனர்.
மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், பெரும் சொத்து சேதம் ஏற்பட்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.