டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழை - 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

அரியானா மற்றும் உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Delhi Rain
Published on: 
Summary

டெல்லியின் 11 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அரியானா மற்றும் உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கனமழை

டெல்லி, நொய்டா, குரு கிராம் மற்றும் காசியாபாத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. டெல்லி என்.சி.ஆர். பகுதியில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. கரோல் பாக் பகுதியில் உள்ள ஜண்டேவாலன் கோவில் அருகேயும் மழை நீர் தேங்கியது.

இதனால் காலையில் போக்குவரத்து பாதித்தது. மோசமான வானிலை நிலவிய போதிலும், டெல்லி விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கியது.

கனமழை காரணமாக டெல்லியில் குளிர்ச்சியான கால நிலை நிலவியது. தொடர்ந்து டெல்லியில் கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் டெல்லியின் 11 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அரியானா மற்றும் உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com