மாணவர்கள் போராட்டம் தொடர்பாக விவாதம்: அமித் ஷா வைத்த முன்மொழிவு- நிராகரித்த எதிர்க்கட்சிகள்

மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அமித் ஷா உத்தரவிட்டிருந்தால் அவர் குற்றவாளி என ராகுல் காந்தி தெரிவித்தார்.
அமித் ஷா- ராகுல் காந்தி
அமித் ஷா- ராகுல் காந்தி
Published on

மாணவர்கள் போராட்டத்தில் அடக்குமுறை மேற்கொண்டது தொடர்பான விவகாரத்திற்கு தான் தயார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வைத்த முன்மொழிவை எதிர்க்கட்சியினர் நிராகரித்தனர்.

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்திற்கு மாணவர்கள், இளைஞர்கள் ஆதரவு தெரிவித்தனர். கடந்த 20-ந்தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது.

மாணவர்கள் மீது தடியடி

அப்போது கரப்பான்பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் வகையில் பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது மாணவர்கள் தடுப்புகளை தாண்டி நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முயன்றனர். அப்போது போலீசாடி தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி அவர்களை கலைத்தனர். அப்போது வெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட அடக்குமுறை நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக அமித் ஷா நாடாளுமன்றத்திற்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

விவாத்திற்கு தயார் என அமித் ஷா அறிவிப்பு

நாடாளுமன்ற விவகாரத்துறை, அமைச்சர் கிரண் ரிஜிஜு, "அமித் ஷா விவாகத்தில் கலந்து கொள்ள தயாராக உள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகள் அவையில் வெளிநடப்பு செய்யக்கூடாது" என்று வேண்டுகோள் விடுத்தார்.

இன்று காலை அவை தொடங்குவதற்கு முன்னதா அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இன்று கூட, அவர்கள் (எதிர்க்கட்சிகள்) 2 மணிக்குள் சபாநாயரிடம் கடிதம் வழங்க வேண்டும். இன்று மதியம் 3 மணியில் இருந்து நாளை மதியம் 3 மணி வரைக்கும் அனைத்து வகையிலான விவாதத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.

நாளையுடன் மழைக்கால கூட்டத் தொடர் முடிவடைய இருக்கிறது.

ராகுல் காந்தி சொல்வது என்ன?

அமித் ஷா கூறிய நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி அமித் ஷாவின் முன்மொழிவை நிராகரித்துள்ளார். பெல்லட் துப்பாக்கிகள் மூலம் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவு போட்டது யார் என்பதை இளைஞர்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் என்றார்.

நாடாளுமன்றத்தில் அமித் ஷாவின் கற்பனையான கருத்துகளையும் அவர் வழங்கும் விரிவுரையையும் கேட்க எதிர்க்கட்சிகளுக்கு விருப்பமில்லை. மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஷா உத்தரவிட்டிருந்தால் அவர் குற்றவாளி. அவ்வாறு உத்தரவிடவில்லை என்றால் அவர் திறமையற்றவர். எந்தச் சூழலாக இருந்தாலும் அவர் பதவி விலக வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா இது தொடர்பாக சபாநாயகருக்குக் கடிதம் எழுதினார்.

"எதிர்க்கட்சியினருடன் கலந்தாலோசிக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அனைவரின் ஒப்புதலுடனும், விவாதத்திற்குத் தேவையான அளவு நேரத்தை ஒதுக்குங்கள். விவாதத்தின்போது நடைபெறும் முழு விவாதத்திலும் நான் பங்கேற்பேன். அத்துடன் எதிர்க்கட்சியினர் எழுப்பும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிப்பேன்," என்று ஷா கூறினார்.

மேலும், ஜனநாயகத்தில் தீர்வு காண்பதற்கான ஒரே வழி பேச்சுவார்த்தைகளும் கலந்தாய்வுகளுமே. ஜனநாயகத்தின் மீதும் ஜனநாயக அமைப்புகளின் மீதும் தனக்கு முழு நம்பிக்கை உள்ளது. மாணவர் போராட்டங்கள் தொடர்பான முக்கிய விவகாரத்தில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை வெளிப்படுத்த இந்த விவாதம் வழிவகுக்க வேண்டும் என்று அமித் ஷா தெரிவித்தார்.

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

ஆனால் அவையில் அமளி தொடர்ந்தது. இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட பிறகு பிற்பகல் 3 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியபோது, ​​எதிர்க்கட்சியினரின் கூச்சல் மற்றும் போராட்டங்கள் மீண்டும் தீவிரமடைந்தன.

இந்த அமளிக்கு மத்தியிலும், மாணவர் போராட்டம் குறித்த விவாதத்தை உடனடியாகத் தொடங்க அரசு தயாராக இருப்பதாகவும், இது தொடர்பாக உள்துறை அமைச்சர் ஷா ஏற்கனவே சபாநாயகருக்குக் கடிதம் எழுதியிருப்பதாகவும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அவையில் அறிவித்தார்.

எதிர்க்கட்சியினரின் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க உள்துறை அமைச்சர் தயாராக இருக்கும் நிலையில், அவர்கள் விவாதத்திலிருந்து விலகிச் செல்லக்கூடாது என்று அவர் கூறினார்.

ஆனால் அமைச்சரின் வேண்டுகோள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை.

முழக்கங்கள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில், அவையை வழி நடத்திய ஜகதம்பிகா பால், விவாதத்திற்கான அரசின் முன்மொழிவை ஏற்றுக் கொள்ளுமாறு எதிர்க்கட்சியினரைத் தொடர்ந்து வலியுறுத்தினார். அவரது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com