

திருமலையில் உள்ள அனைத்து சுப இடங்களும் செயலியில் தோன்றும். அங்கு செல்வதற்கான அனைத்து வழிகளும் காட்டப்படும்.
திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாருடைய உதவியும் இன்றி தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை எளிதாகச் சென்றடையும் வகையில், திருமலை தேவஸ்தானம் 'கருட மேப்' என்ற செயலியை உருவாக்கியுள்ளது.
இந்தச் செயலி, திருமலை தொடர்பான அனைத்துத் தகவல்களையும் கொண்டு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்தர் எந்த இடத்திற்குச் செல்ல விரும்பினாலும், செயலியில் அந்த இடத்தின் பெயரை உள்ளிடுவதன் மூலமோ அல்லது குரல் கட்டளை கொடுப்பதன் மூலமோ எளிதாக அந்த இடத்தை அடையலாம்.
திருமலையில் உள்ள அனைத்து சுப இடங்களும் செயலியில் தோன்றும். அங்கு செல்வதற்கான அனைத்து வழிகளும் காட்டப்படும்.
நடந்தே செல்ல வேண்டிய தூரம், வாகனத்தில் செல்ல வேண்டிய தூரம் மற்றும் சென்றடைய ஆகும் நேரம் ஆகியவை காட்டப்படும். மேலும், உடனடியாகச் சென்றடைவதற்கான எளிதான வழியையும் இது குறிப்பிடுகிறது.
இவ்வாறு, பல்வேறு வகையான தரிசன நுழைவாயில்கள், வரிசை வளாகங்கள், லட்டு மையங்கள், விருந்தினர் இல்லங்கள், உணவுக் கூடங்கள், குடிநீர் மையங்கள், மருத்துவ மையங்கள் போன்றவை குறித்த முழுமையான தகவல்களை இந்தச் செயலி மூலம் பெறலாம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 78,777 பேர் தரிசனம் செய்தனர். 28,244 பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தினர். ரூ.4.35 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.
ேநரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.