

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் நேபாளத்தில் 11 பேரும், இந்தியாவில் 56 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில், நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) முதல் இன்று (ஞாயிறு) காலை வரையில் 66.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் 56 பேர் உயிரிழந்ததுடன், 46 பேர் காயமடைந்துள்ளனர். 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
இக்காலகட்டத்திற்கான இயல்பான மழை அளவு 7.6 மி.மீ மட்டுமே, ஆனால் 66.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது மிகவும் அசாதாரணமானது என மாநிலத்தின் பேரிடர் நிவாரண ஆணையர் ரிஷிகேஷ் பாஸ்கர் யஷோத் தெரிவித்தார்.
வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பொருட்கள் விநியோகம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பயிர் சேதத்தை மதிப்பிட்டு உரிய இழப்பீடு வழங்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் இடைவிடாத மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளபெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர் .
நேபாளத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் இடைவிடாத மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளபெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர் .
இன்று காலை, மத்திய நேபாளத்தில் உள்ள நாராயணி ஆற்றில் நீர்மட்டம் 9 மீட்டர் என்ற எச்சரிக்கை அளவைத் தாண்டி குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்ததை அடுத்து, ஆற்றின் கரையோரம் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர் .
நாடு முழுவதும் பயணம் செய்வதற்கான சந்திப்புப் புள்ளியாக விளங்கும் சிட்வானுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவல்படி, வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை மாலை வரை மழையால் ஏற்பட்ட பேரிடரில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர்.
அதேவேளையில், மியாக்டி மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.
பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்குத் தடையாக உள்ள நிலையில், தொடர் கனமழையால் நிலைமை மோசமடைந்து வருகிறது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேபோல், அருகிலுள்ள பக்லுங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவிலும் மேலும் நான்கு பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
வெள்ளப்பெருக்கு மற்றும் வெள்ள அபாயத்தைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் பல மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிர்களைப் பலிவாங்கியும், 6000க்கும் மேற்பட்டோரைக் காணாமல் போகச் செய்தும் உள்ள போதேகோஷி வெள்ளப் பேரழிவுக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, இமயமலை நாட்டில் இந்த சமீபத்திய பேரிடர் நிகழ்ந்துள்ளது.
முன்னதாக ஆகஸ்ட் 26 அன்று காலையில் பனிப்பாறை சரிவால் ரசுவா மாவட்டத்தில் கோஷி ஆற்றங்கரை குடியிருப்புகளை வெள்ளம் தாக்கியது, இது நுவாகோட் மற்றும் தாடிங் உள்ளிட்ட அண்டை பகுதிகளையும் பாதித்தது. இந்த பேரழிவில் இதுவரை 1400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே நேபாளத்தின் மனாங் மாவட்டத்தில், திபெத்திய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ஹிம்லுங் ஹிமால் மலை அடிவார முகாமில் இன்று காலை ஏற்பட்ட பனிச்சரிவில் 10 பேர் மாயமாகினர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.