

பழங்குடியின மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்குவதற்காக ஒடிசா வந்த மருத்துவர் ராண்டால் மற்றும் லக்ஷ்மன் நாயக் ஆகியோரை சுரங்க எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் தனது மருத்துவப் படிப்பை ராண்டல் செக்குவேரா (39), மருத்துவப் படிப்பை முடித்த பின்னர், கடந்த 2017-ம் ஆண்டு ஒடிசாவின் காளஹண்டி மற்றும் ராயகடா மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் உள்ள ஏழை ஆதிவாசி மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்களை நடத்தி, சுகாதார சேவைகளை வழங்கி வந்தார்.
தொலைதூர கிராமங்களுக்குச் சென்று ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கினார். மேலும், அப்பகுதி மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இப்பகுதிகளில் உள்ள சிஜிமாலி மலைத்தொடரில் வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான பாக்ஸைட் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக, தங்களின் இயற்கை வளங்களைப் பாதுகாக்க உள்ளூர் பழங்குடியின மக்கள் அமைதியான முறையில் போராடி வருகின்றனர். இந்த 'மா மாட்டி மாலா சுரக்ஷா மஞ்ச்' அமைப்பின் போராட்டங்களுக்கு மருத்துவர் செக்வேராவும் ஆதரவு அளித்து குரல் கொடுத்து வந்துள்ளார்
இந்தச் சுரங்கத் திட்டங்கள் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம், வனப்பகுதிகள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதிக்கக்கூடும் என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் ராயகடா மாவட்டத்தின் காந்தமால் கிராமத்தில் சுரங்க எதிர்ப்புப் போராட்டத்தின் போது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது, பழங்குடியின மக்களைப் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடத் தூண்டியதாகக் கூறி, மருத்துவர் ராண்டால் மற்றும் தலித் ஆர்வலர் லட்சுமன் நாயக் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்
லக்ஷ்மன் நாயக், மா மதி மாலி சுரக்யா மஞ்ச் மற்றும் சமாஜ்வாடி ஜன் பரிஷத் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு முன்னணி தலித் செயற்பாட்டாளர். சுரங்கம் மற்றும் தொழில்மயமாக்கலால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக மக்கள் இயக்கங்களை இருவரும் ஆதரித்து வந்துள்ளனர்.இந்த நிலையில் காவல்துறை இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது .
இவர்கள் இருவரும் வெறும் மருத்துவச் சேவை செய்யவில்லை என்றும், அரசுக்கு எதிராகப் பழங்குடியினரைத் திரட்டி வன்முறையைத் தூண்டியதாகவும், இதனால் 50-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது கொலை முயற்சி, ஆயுதங்களுடன் கலவரம் செய்தல் போன்ற கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
ஆனால், காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் இவர்களின் பெயர்கள் இல்லை என்றும், எந்தவித முன்னறிவிப்போ அல்லது வாரண்டோ இன்றி நள்ளிரவில் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக மனித சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பழங்குடியினரின் நியாயமான போராட்டங்களை ஒடுக்கவே அரசு இத்தகைய கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு பிரபல கர்நாடக இசைப் பாடகரும் சமூக ஆர்வலருமான டி.எம். கிருஷ்ணா தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்ங்களின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காகப் போராடி வரும் தலித் மற்றும் ஆதிவாசி மக்களின் அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதற்காக ஒடிசா மாநில அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் கைது நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இந்த சிறைவாசம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.