இந்து மத குரு காலில் விழுந்த ஈரான் அதிபர்?.. தூதரகம் தந்த விளக்கம்

அறிஞர்களுக்கான சிறப்புச் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
வைரல் வீடியோ
வைரல் வீடியோ
Published on
Summary

டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு இடையே நடந்த ஒரு நிகழ்ச்சியில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், இந்து மத தலைவரின் காலில் விழுந்து வணங்கியதாக இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

பிரிக்ஸ் மாநாட்டின் இடையே டெல்லியில் உள்ள ஓபராய் ஹோட்டலில் ஈரான் தூதரகம் சார்பில் தொழிலதிபர்கள், மதத் தலைவர்கள் மற்றும் அறிஞர்களுக்கான சிறப்புச் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

ஈரான் அதிபர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி பங்கேற்ற நிகழ்ச்சியில் பல்வேறு மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

வைரல் வீடியோ

இதில் பங்கேற்ற உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இந்து சமய தலைவரான சுவாமி சதீஷாச்சார்யாவுடன் ஈரான் அதிபர் பெசெஷ்கியான் பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரெனக் கீழே குனிவது போன்ற வீடியோ வெளியானது.

ஈரான் அதிபர், இந்து மத தலைவரின் காலைத் தொட்டு ஆசி பெற்றார் எனக் கூறி இந்த வீடியோ வேகமாகப் பரப்பப்பட்டது.

ஆனால் இதுகுறித்து ஈரான் தூதரக வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன. அதிபர், தன்னிடம் கொடுக்கப்பட்ட கடிதம் கீழே விழுந்ததால் அதை எடுக்கவே குனித்ததாகவும், அது தவறாக சித்தரிக்கப்பட்டு பரப்பப்டுவதாக விளக்கம் அளித்துள்ளது.

பிரிக்ஸ் மாநாட்டில் ஈரான் அதிபர்

மறுபுறம் பிரிக்ஸ் மாநாட்டின் இடையே அபுதாபி இளவரசரை சந்தித்த பிறகு பேசிய அதிபர் பெசெஷ்கியான், "ஈரானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற அண்டை வளைகுடா நாடுகளுடன் எந்தவிதப் பிரச்சனையோ அல்லது பகையோ இல்லை" எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், "ஈரான் வளைகுடா நாடுகளுக்கு எதிரானது அல்ல; மாறாக அப்பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களுக்கு எதிரானது மட்டுமே. அமெரிக்கா இங்கு வந்து அமைத்துள்ள தளங்களைப் பயன்படுத்தித் தான் எங்களது தலைவர்கள், தளபதிகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. அதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்" என பெசெஷ்கியான் கூறினார்.

புதுடெல்லி பிரகடனம்

பிரிக்ஸ் மாநாட்டின் முதல் நாளான நேற்று, பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்கள் ஒன்றிணைந்து வெளியிட்ட புதுடெல்லி பிரகடனத்தில், மத்திய கிழக்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர்ப் பதற்றம் குறித்துக் கடும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளைகுடாப் பிராந்தியத்தில் நிலையான அமைதியை ஏற்படுத்தத் தூதரகப் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிகளையே முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என பிரிக்ஸ் கூட்டமைப்பு அந்த பிரகடனத்தில் கோரியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com