I Don't Care.. பிரிக்ஸ் மாநாட்டில் ஈரான் அதிபர் - அமீரக இளவரசர் பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப்

அமெரிக்காவிற்கு சாதகமான சரியான ஒப்பந்தம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
மீரக இளவரசர், ஈரான் அதிபர், டிரம்ப்
மீரக இளவரசர், ஈரான் அதிபர், டிரம்ப்
Published on
Summary

பிரிக்ஸ் மாநாட்டில் ஈரான் அதிபர், ஐக்கிய அரபு அமீரக இளவரசர் சந்திப்பு குறித்து டிரம்ப் கருத்த தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற 18வது பிரிக்ஸ்உச்சி மாநாட்டின் இடையே, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவி வரும் சூழலில் நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

டிரம்பின் கருத்து

அயர்லாந்துக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற 'ஐரிஷ் ஓபன்' கோல்ப் தொடரின் இடையே செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறியதாவது, , "வளைகுடா நாடுகள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை; அது அவர்களின் விருப்பம், எனக்கு அதைப்பற்றி அக்கறை இல்லை (I don't care)" என தெரிவித்தார்.

ஈரான் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்திற்கு வரக் கடுமையாக முயற்சிப்பதாகவும், தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கான அழைப்புகளை விடுத்து வருவதாகவும் தெரிவித்த டிரம்ப், அமெரிக்காவிற்கு சாதகமான சரியான ஒப்பந்தம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

முன்னதாக, அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகோ அல்லது அதற்கு முன்பாகவோ ஈரானுடனான மோதல் முடிவுக்கு வரும் எனக் குறிப்பிட்ட டிரம்ப், போர் முடிவுக்கு வந்தவுடன் அமெரிக்காவில் பெட்ரோல் மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் அதிரடியாக குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான்

பிரிக்ஸ் மாநாட்டின் இடையே அபுதாபி இளவரசரை சந்தித்த பிறகு பேசிய அதிபர் பெசெஷ்கியான், "ஈரானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற அண்டை வளைகுடா நாடுகளுடன் எந்தவிதப் பிரச்சனையோ அல்லது பகையோ இல்லை" எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், "ஈரான் வளைகுடா நாடுகளுக்கு எதிரானது அல்ல; மாறாக அப்பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களுக்கு எதிரானது மட்டுமே. அமெரிக்கா இங்கு வந்து அமைத்துள்ள தளங்களைப் பயன்படுத்தித் தான் எங்களது தலைவர்கள், தளபதிகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. அதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்" என பெசெஷ்கியான் கூறினார்.

புதுடெல்லி பிரகடனம்

பிரிக்ஸ் மாநாட்டின் முதல் நாளான நேற்று, பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்கள் ஒன்றிணைந்து வெளியிட்ட புதுடெல்லி பிரகடனத்தில், மத்திய கிழக்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர்ப் பதற்றம் குறித்துக் கடும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளைகுடாப் பிராந்தியத்தில் நிலையான அமைதியை ஏற்படுத்தத் தூதரகப் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிகளையே முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என பிரிக்ஸ் கூட்டமைப்பு அந்த பிரகடனத்தில் கோரியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com