திருப்பதியில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

திருப்பதியில் 3 கி.மீ. வரிசையில் காத்திருந்த பக்தர்கள்
Tirupati
Published on: 
Summary

இன்று 2-வது புரட்டாசி சனிக்கிழமை என்பதால் திருப்பதி கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை காலை முதல் அதிகரித்து வருகிறது.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நடைபயணமாகவும் இன்று காலை திருப்பதிக்கு வந்தனர். வைகுந்தம் அறைகள் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது.

பிரம்மோற்சவ விழா

திருப்பதி மலை முழுவதும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. காத்திருப்பு அறைகளை தாண்டி தரிசன வரிசையில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் உள்ள ஷீலா தோரண வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

திருப்பதி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவிற்கு பிறகு கூட்டம் அதிகரித்து வருகிறது.

விடுமுறையை முன்னிட்டு குவிந்த பக்தர்கள்

நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட்டுகளை பெற 6 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தனர். திருப்பதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் மிதமான குளிர்ந்த காற்று வீசியது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றார் போல ஏற்பாடுகள் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

20 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதியில் நேற்று 66,014 பேர் தரிசனம் செய்தனர். 31,092 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.44 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

4.23 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com