

திருப்பதி மலையில் தொடர்ந்து மழை, குளிர் அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் அவதியடைந்தனர்.
திருப்பதியில் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர். நேற்று 73,226 பேர் சாமி தரிசனம் செய்தனர். 24,754 பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தினர். ரூ.2.66 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.
நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 6 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்தனர். திருப்பதி மலையில் தொடர்ந்து மழை, குளிர் அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் அவதியடைந்தனர்.
கடந்த 2 நாட்களாக திருப்பதியில் கனமழை பெய்ய தொடங்கி விட்டது. இதன் காரணமாக நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வெப்பம் தணிந்து மலைப் பகுதிகளில் குளிர் நிலவுவதால் திருப்பதி மலை முழுவதும் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
காலை வேளைகளிலும், மாலை வேலைகளிலும் மலையே பனியால் மூடிக் கொள்கிறது. இதனால் திருப்பதி -திருமலை இடையே வாகன ஓட்டிகள் பாதை சரிவர தெரியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மலைப் பாதைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நிபந்தனைகளை கடைப்பிடித்து, மெதுவாக செல்ல வேண்டும்.
முன்னால் செல்லும் வாகனங்களை வேகமாக முந்தி செல்ல முயற்சிக்க வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது.