புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி திருப்பதியில் பக்தர்கள் குவிந்தனர்

நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
Tirupati
Published on: 
Summary

4-வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதாலும், தசரா விடுமுறை என்பதாலும் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய, திருப்பதி மலையில் பக்தர்கள் குவிந்தனர். புரட்டாசி மாதத்தில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். அதிலும் குறிப்பாக, தமிழக பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. பலர் மஞ்சள் ஆடை உடுத்தி, கோவிந்த மாலை அணிந்து, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து நேர்த்திக் கடனாக நடந்து வந்து, விரதத்தைத் நிறைவு செய்தனர்.

சனிக்கிழமை

தற்போது 4-வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதாலும், தசரா விடுமுறை என்பதாலும் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது.

திருப்பதி

திருப்பதியில் நேற்று 68,187 பேர் தரிசனம் செய்தனர். 23,923 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.45 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 4.29 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com