தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல்: பாஜக நாடாளுமன்ற நிர்வாகக் குழுவை சந்தித்த மோடி!

நாளை தொடங்கும் சிறப்பு கூட்டத்தொடர் டிச.3 வரை நடைபெறுகிறது.
தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல்: பாஜக நாடாளுமன்ற நிர்வாகக் குழுவை சந்தித்த மோடி!
Published on: 

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், இன்று பாஜக நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்து பேசியுள்ளார் பிரதமர் மோடி.

இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டா, பாஜக தலைவர் நிதின் நபின் மற்றும் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தைத் தொடர்ந்து, கஜேந்திர ஷெகாவத், பூபிந்தர் யாதவ், கிரண் ரிஜிஜு, மனோகர் லால் கட்டார் மற்றும் பிரல்ஹாத் ஜோஷி உள்ளிட்ட குறைந்தது 10 மத்திய அமைச்சர்கள், மசோதாவுக்கான வாக்களிப்பு செயல்முறையை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கியதாக கூறப்படுகிறது.

திங்கட்கிழமை தொடங்கி டிசம்பர் 3 வரை நடைபெறும் சிறப்புக் கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை, மகளிர் இட ஒதுக்கீடு உள்ளிட்ட மூன்று மசோதாக்களைக் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.

X