

உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கு பனிப் பொழிவு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவான அர்னாப் புயலின் தாக்கங்கள் உணரத் தொடங்கியுள்ளன. இன்று 14 மாநிலங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் கேரளாவிற்கு ஆரஞ்சு நிற மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்று இரவு முதல் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இதற்கிடையில், வட இந்திய மாநிலங்களில் நிலவும் குளிரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெல்லி, உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிதமான குளிர் அலை ஏற்கனவே நுழைந்துள்ளது. மலைப்பகுதிகளில் பெய்த பனிப்பொழிவு, சமவெளிப் பகுதிகளில் குளிரின் தாக்கத்தை அதிகரித்துள்ளது. உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கு இன்று பனிப் பொழிவு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.