கரையை கடக்க தொடங்கிய அக்வான் புயல்.. ஒடிசாவில் கனமழை

3 லட்சம் மக்களை முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.
அக்வான் புயல்
Published on: 
Summary

அக்வான் புயல் ஒடிசாவில் கரையை கடக்க தொடங்கியது.

வங்கக்கடலில் உருவான அக்வான் புயல் ஒடிசா கடற்கரையை நோக்கி நோக்கி நகர்ந்து வந்த நிலையில் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கோபால்பூர் அருகே கரையை கடக்க தொடங்கியது. இன்று நண்பகலுக்குள் புயல் முழுமையாக கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கனமழை

இதனிடையே 'அக்வான்' புயல் காரணமாக காலை முதல் ஒடிசாவில் புவனேஸ்வர் உட்பட பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

ஒடிசா மாநிலத்தில் 20 மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் மக்களை முன்னெச்சரிக்கையாக அபாயகர பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

பலர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 423 மீட்புக் குழுக்களையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

புயல் கரையைக் கடக்கும் நேரத்தில், உயரக்கூடிய புயல் அலை, கடலோர ஒடிசாவின் தாழ்வான பகுதிகளை, குறிப்பாக கஞ்சம் மற்றும் பூரி மாவட்ட கடற்கரை பகுதிகளை மூழ்கடிக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

X