

உலகம் முழுவதும் 1900 ஆண்டுமுதல் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், அதிக அளவிலான தொடர் கொலையாளிகள் ஆவணப்படுத்தப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.
சமீபத்திய 2026 ராட்ஃபோர்ட்/எஃப்.ஜி.சி.யு (Radford/FGCU) அறிக்கையின்படி, 1900 ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட தொடர் கொலையாளிகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்தத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த எண்கள் அந்தந்த நாடுகளின் ஒட்டுமொத்த பாதுகாப்பு குறைபாட்டை மட்டும் குறிப்பதில்லை; மாறாக, அங்குள்ள குற்றவியல் விசாரணை முறைகள், ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்றுப் பதிவுகளின் வெளிப்படைத்தன்மையையும் காட்டுகின்றன.
இந்த பட்டியலில் அமெரிக்கா 3,803 கொலையாளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இது இரண்டாம் இடத்தில் இருக்கும் இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கையான 188-ஐ விட 20 மடங்குக்கும் அதிகமாகும்.
ரஷ்யா 172 பேருடன் மூன்றாம் இடத்திலும், அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா (153) மற்றும் ஜப்பான் (145) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. 135 கொலையாளிகளுடன் இந்தியா 6வது இடத்தில் உள்ளது.