

பிரிக்ஸ் மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. பிரிக்ஸ் மாநாட்டிற்கு உலக நாட்டின் தலைவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையே இந்த பிரிக்ஸ் மாநாட்டில் என்ன லாபம் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னேற்றத்தை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால்தான் பிரிக்ஸ் மாநாடு தொடர்பாக எதிர்மறையாக கருத்துகளை பரப்பி வருகின்றனர் என்று பாஜக-வின் தேசிய செய்தி தொடர்பான சம்பித் பத்ரா தெரிவித்து்ளளார்.
2011-12 காலகட்டத்தில் BRIC அமைப்பில் உள்ள `I' (இந்தியா) நிலையற்ற தன்மையை எதிர்கொண்டிருந்த நிலையில், தற்போது இந்தியா BRICS-இன் மிக வலுவான கூட்டாளிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இன்று, உலக அரங்கில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது இடத்தைப் பிடித்துள்ளது.
நினைவில் கொள்ளுங்கள், BRICS-இல் உள்ள `I' என்பது இந்தியாவைக் குறிக்கிறது. அந்த `I' இந்தியாவின் 140 கோடி மக்களையும் குறிக்கிறது. நானே இந்தியா. BRICS-இன் மிக வலுவான கூட்டாளிகளில் ஒருவனாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். இன்று, இந்தியாவின் குடிமகனாகவும், BRICS-இன் மிக வலுவான உறுப்பினராகவும் இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
இன்று, காங்கிரஸ் கட்சியும் சில எதிர்க்கட்சிகளும் பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாடு குறித்து எதிர்மறை எண்ணங்களைப் பரப்பவும், ஒரு எதிர்மறையான சூழலை உருவாக்கவும் முயற்சிக்கின்றன. அவர்களுக்கு ஒரு கண்ணாடியைக் காட்ட வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
மதிப்பீட்டு அடிப்படையில் 2012-இல் பிரிக் (BRIC) உறுப்பு நாடுகளில் மிகவும் குறைவான ஈர்ப்பைக் கொண்ட நாடாக இந்தியா இருந்தது என்பதை கோல்ட்மேன் சாக்ஸ் கட்டுரை தெளிவாகக் கூறுகிறது.
இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.