வாக்குச்சீட்டு மூலம் மக்களவை, மாநில தேர்தல்களை நடத்த முன்வாருங்கள்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பதிலடி

28 எம்.எல்.சி. இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்றவில்லை.
பிரதமர் மோடி- பவன் கெரா
பிரதமர் மோடி- பவன் கெரா
Published on: 

உத்தர பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் 28 மேலவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை எனத் தெரிகிறது. குறிப்பாக கர்நாடகாவில் 4 இடங்களில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. இந்த தோல்வி காங்கிரஸ் கட்சியின் அமைப்பு ரீதியிலான பலத்தை கேள்வி எழுப்பியுள்ளது. 28 இடங்களில் 12-ல் காங்கிரஸ் போட்டியிட்டது.

காங்கிரஸை கிண்டல் செய்த பிரதமர் மோடி

எம்.எல்.சி. தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், பிரதமர் மோடி தற்போது வாக்குச்சீட்டு முறையில் எம்.எல்.சி. தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்பதை யூகித்து பாருங்கள் என, அக்கட்சியை கிண்டல் செய்யும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி கிண்டலுக்கு காங்கிரஸ் பதில் அளித்துள்ளது. பாஜகவுக்கு வலிமை நம்பிக்கை இருந்தால் சொல்லால் அல்ல, செயலால் நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கெரா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:-

தேர்தல் முடிவுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு (EVMs) எந்தத் தொடர்பும் இல்லை என்று நரேந்திர மோடி உறுதியாக நம்பினால், வெறும் பேச்சால் அல்ல, செயலின் மூலம் பாஜகவின் தேர்தல் வலிமையை அவர் நிரூபிக்கட்டும்.

இனி வரும் தேர்தல்களை வாக்குச்சீட்டில் நடத்த உறுதி அளிக்க வேண்டும்

இனிவரும் அனைத்து மக்களவை தேர்தல்களையும், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல்களையும் வாக்கு சீட்டு முறையிலேயே நடத்த உறுதியளியுங்கள். வாக்காளர் பட்டியலில் இருந்து சட்டவிரோதமாக நீக்கப்பட்ட 13.3 கோடி வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேருங்கள். ஞானேஷ் குமாரை பணியிலிருந்து நீக்குங்கள். ஞானேஷ் குமாருக்கு வாழ்நாள் பாதுகாப்பு (immunity) வழங்கும் சட்டத்தை ரத்து செய்யுங்கள்.

மோடி இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை, அவர் முன்வைக்கும் வாதங்கள் வெறும் அர்த்தமற்ற வெற்றுப் பேச்சுகளே. அவற்றை யாரும் தீவிரமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இவ்வாறு பவன் கெரா குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com