ரூ.2,000 வரையிலான UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க மத்திய அரசு தடை

ரூ. 2,000 ஐ தாண்டிய யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படலாம்.
 UPI பரிவர்த்தனை
UPI பரிவர்த்தனை
Published on
Summary

ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என வங்கிகள் மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவை வழங்குநர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரவு

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள இன்று வெளியிட்டுள்ள உத்தரவில், "ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும், ரூபே டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட முறைகள் மூலம் பணம் செலுத்தும் அல்லது பெறும் ஒரு நபரிடம், எந்தவொரு வங்கியும் அல்லது பணம் செலுத்தும் முறைமை வழங்குநரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தக் கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007ன் பிரிவு 10 ஏவில் திருத்தும் செய்து கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 'வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2026'வின் கீழ் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரூ.2000-க்கு மேல் உள்ள பரிவர்த்தனைகள்

புதிய விதியின்படி, ரூ. 2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும், ரூபே பற்று அட்டைகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படாது.

இருப்பினும், வணிகர் தள்ளுபடி விகிதம் செயல்படுத்தப்படாவிட்டாலும், ரூ. 2,000 ஐ தாண்டிய யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படலாம்.

2025-26 ஆம் ஆண்டில், நடந்த யு.பி.ஐ பரிவர்த்தனைகளில் ரூ. 2,000-க்கும் அதிகமான தொகைக்கு வெறும் 4% மட்டுமே பரிவர்த்தனைகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதவாது ஒப்பீட்டளவில் ரூ.2000க்கு கீழ் பரிவர்த்தனை செய்வோரே அதிகம். எனவே இந்த வரி விலக்கு சாமானிய மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது.

டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல் வேகமாக அதிகரித்து வருவதால், நாட்டின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையை நிதி ரீதியாக மேலும் வலுப்படுத்த கட்டணங்களை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com