இனி இலவசம் கிடையாது.. UPI பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணம் - மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

இம்மசோதா விவாதமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிரைவேற்றப்பட்டது.
மக்களவை
மக்களவை
Published on

ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் UPI பணப்பரிவர்த்தனைகளுக்கு MDR எனும் சேவைக்கட்டணத்தை விதிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் 'வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா' மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

2007ஆம் ஆண்டின் 'Payment and Settlement Systems Act' சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த இம்மசோதா விவாதமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

புதிய சேவைக் கட்டணம்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்புகளைப் பராமரிப்பதற்காக, வங்கிகள் அல்லது கட்டண சேவை நிறுவனங்கள் வியாபாரிகளிடமிருந்து வசூலிக்கும் கட்டணமே Merchant Discount Rate (MDR) ஆகும்.

2020 ஜனவரி முதல் யு.பி.ஐ மற்றும் RuPay கார்டு பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணம் முழுமையாக விலக்களிக்கப்பட்டிருந்தது.

இலவச சேவை முறையை நிதி ரீதியாகத் தொடர்ந்து நடத்துவது கடினம் என இந்திய ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்துள்ளது.

மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், தேவையான கட்டங்களில் வங்கிகள் மற்றும் சேவை நிறுவனங்கள் MDR கட்டணத்தைச் சேகரிக்க அனுமதி அளிக்கும் சட்டப்பூர்வ அதிகாரம் இனி மத்திய அரசிடம் இருக்கும்.

வாடிக்கையாளர்களுக்கு நிதிச்சுமை

அதிகத் தொகை கொண்ட யு.பி.ஐ பரிவர்த்தனைகளுக்கோ அல்லது வணிகர்களின் வருடாந்திர வருவாயை அடிப்படையாகக் கொண்டோ எதிர்காலத்தில் சேவைக்கட்டணம் விதிக்கப்படலாம்.

தற்போது வணிகர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்றாலும், MDR அறிமுகப்படுத்தப்பட்டால் இந்த நிதிச்சுமை சிறுகச் சிறுகக் கடைசியில் வாடிக்கையாளர்களைச் சென்றடைய வாய்ப்புள்ளது.

MDR

தற்போது கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு சராசரியாக 1.5% மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 0.9% MDR கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேலும், RTGS மற்றும் NEFT போன்ற பிற டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ஏற்கனவே சேவைக்கட்டணம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com