பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு - மும்பையில் பரபரப்பு!

ஷெராஃப் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும், அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் மும்பை காவல்துறை தகவல்.
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு!
Published on: 

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்மீது மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மும்பை ஜூஹூ பகுதியில் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள், நடிகர் மற்றும் அவரது ஓட்டுநர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், சம்பவத்தைத் தொடர்ந்து ஷெராஃப் பாதுகாப்பாக இருப்பதாகவும் மும்பை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் தெரியாதநிலையில், சம்பவம் தொடர்பாக விசாரித்து வருவதாகவும், இதற்கு காரணமானவர்களை தேடிவருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com