

தேசிய மற்றும் மாநில கட்சிகள் தேர்தலின்போது, கட்சி நிதி (நன்கொடை) பெறுவது உண்டு. இந்த பணம் கட்சிகளுக்கு அக்கவுண்ட் மன்றும் நக்கொடை பத்திரம் மூலமாகவும் வழங்கப்படுகிறது. கடைசியாக தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
அப்போது பாஜக தேர்தல் நிதியாக 1473 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இந்த தொகை அனைத்தும் மத்திய தலைமையகத்திற்கு வந்துள்ளது. அதேவேளையில் காங்கிரஸ் கட்சிக்கு 207 கோடி ரூபாய் மட்டுமே தேர்தல் நிதியாக வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ள தேர்தல் வரவு செலவு கணக்கு அறிக்கையின் மூலம் இந்த தரவு கிடைக்கப்பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு 207.17 கோடி ரூபாய் கிடைக்கப் பெற்ற நிலையில், 248.55 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. மார்ச் 15-ந்தேதியில் இருந்து மே 15-ந்தேதி வரையிலான தேர்தல் காலத்தின் வரவு செலவை இது காட்டுகின்றன.
கேரளம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் கட்சிகள் செலவழித்துள்ள தொகை எவ்வளவு என்று பாஜக இன்னும் வெளியிடவில்லை.
பா.ஜ.க. செலவு செய்தாலும், மார்ச் 15-ந்தேதி 6,722.6 கோடி ரூபாயாக இருந்த கையிருப்பு, தேர்தலுக்கு பின் மார்ச் 6-ந்தேதி 7627.2 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் கணக்கில் 169.06 (கையிருப்பு 22.9 கோடி ரூபாய், வங்கி கணக்கில் 146.1 கோடி ரூபாய்) இருந்தது. தேர்தல் முடிவடைந்த பிறகு அந்த தொகை 103.2 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநில தேர்தலுக்காக பா.ஜ.க. 159.7 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. பொதுவான கட்சி பிரச்சாரத்திற்கு மட்டும் 130.4 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. மீதமுள்ளவை வேட்பாளர்கள் மற்றும் அது தொடர்பான செலவினங்களாகும்.
அசாம் மாநிலத்திற்கு மட்டும் 96.27 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. பொதுவான கட்சிப் பிரச்சாரத்திற்கு மட்டும் 76.73 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. 19.54 கோடி ரூபாய் வேட்பாளர்கள் மற்றும் அது தொடர்பான செலவினங்களாகும்.
விளம்பரைம் மற்றும் நட்சத்திர வேட்பாளர்களின் டிராவல் ஆகியவற்றிற்கு அதிகப்பட்டியாக செலவினம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பாஜக 51.56 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இதில் 44.51 கோடி ரூபாய் பொது பிரசாரம், 7.05 கோடி ரூபாய் வேட்பாளர்கள் செலவினம் ஆகும்.
புதுச்சேரியில் பாஜக 11.90 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. இதில் 9.19 கோடி ரூபாய் பொது பிரசாரம், 2.71 கோடி ரூபாய் வேட்பாளர்கள் செலவினம் ஆகும்.
ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி பொது பிரசாரம் என்ற வகையில் 143 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது, வேட்பாளர்கள் செலவினம் என 105.55 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மத்திய தலைமையகம் 40.52 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. மாநில காங்கிரஸ் சார்பில் 102.49 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.