பிர்சா முண்டாவின் தியாகம் தலைமுறைகளை தாண்டி ஊக்கமளிக்கும் - பிரதமர் மோடி

நாட்டு மக்களுக்கு பழங்குடியினர் பெருமை தினம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் .
பிர்சா முண்டாவின் தியாகம்  தலைமுறைகளை  தாண்டி ஊக்கமளிக்கும் - பிரதமர் மோடி
Published on: 

பகவான் பிர்சா முண்டாவின் 151வது பிறந்தநாளையொட்டி (நவம்பர் 15, 2026) பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தி, நாட்டு மக்களுக்கு 'ஜஞ்ஜாதிய கவுரவ திவாஸ்' (பழங்குடியினர் பெருமை தினம்) வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் .

பழங்குடியின மகக்ளின் உரிமைகள மற்றும் சுதந்திரத்திற்காக போராடிய பிர்சா முண்டாவின் தியாகம் தலைமுறைகளை தாண்டியும் ஊக்கமளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலை தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

பிரதமர் மோடி வாழ்த்து

பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளில், நம் நாட்டு மக்கள் அனைவரின் சார்பாகவும் அவருக்கு எனது மனம் நெகிழ்ந்த மரியாதையைச் சமர்ப்பிக்கிறேன்.

இந்த நன்னாளில் கொண்டாடப்படும் 'ஜஞ்சாதிய கௌரவ் திவாஸ்' (பழங்குடியின கௌரவ தினம்) நல்வாழ்த்துகளை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தார்த்தி ஆபா' (பூமியின் தந்தை) என்று போற்றப்படும் பிர்சா முண்டாவின் அசைக்க முடியாத துணிச்சல், போராட்டம் மற்றும் தியாகம் ஆகியவை, சுயமரியாதை, சுதந்திரம் மற்றும் உரிமைகளைக் காக்க நம் நாட்டின் ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.

அவரிடமிருந்து உத்வேகம் பெற்று, நமது பழங்குடியின சகோதர சகோதரிகளுக்கு கண்ணியம், வாய்ப்புகள் மற்றும் செழிப்பை உறுதி செய்ய எங்கள் அரசு அயராது பாடுபட்டு வருகிறது.

நாட்டைக் கட்டமைப்பதில் பழங்குடியின சமூகங்கள் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பைப் போற்ற, நாம் அனைவரும் ஒன்றிணைவோம். என்று கூறிப்பிட்டுள்ளார்.

யார் இந்த பிர்சா முண்டா

பிர்சா முண்டா (Birsa Munda) பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் நிலவுடமைதாரர்களின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய ஒரு முக்கிய இந்தியப் பழங்குடி விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியும் ஆவார்.1875 நவம்பர் 15 அன்று சோட்டா நாக்பூர் பீடபூமியில் தற்போதைய ஜார்க்கண்ட் பகுதியில் பிறந்தார்உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என்று முழக்கமிட்டுப் பழங்குடி மக்களை ஒருங்கிணைத்தார்

இவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியாவில் பழங்குடியினர் திருநாளானது சிறப்பிக்கப்படுகிறது .

X