கட்டாய மதமாற்ற தடை சட்டம் - கர்நாடக சட்ட சபையில் இன்று தாக்கல்

இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில தலைவர் டிகே சிவக்குமார், சட்ட நகலை கிழித்து தரையில் வீசினார்.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை
Published on

பெங்களூர்:

கர்நாடகாவில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்திற்கு அம்மாநில மந்திரி சபை நேற்று ஒப்புதல் அளித்தது. இதை தொடர்ந்து

அந்த சட்டத்தை மாநில மந்திரி அரகா ஞானேந்திரா, இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். இது தொடர்பாக நாளை விவாதம் நடத்துவதற்கு சபாநாயகர் விஷ்வாஷ்வார் ஹெக்டே கார்கி ஒப்புதல் அளித்தார். ஆனால் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவக்குமார், சட்ட நகலை கிழித்து தரையில் வீசினார். இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து பேசிய அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, ‘சட்டமன்றத்தில் இந்த மதமாற்ற சட்டம் குறித்து விவாதம் நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் விவாதம் செய்ய தயாராக இல்லை. இது அரசின் தவறு இல்லை’ என விளக்கம் அளித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com