அரியானாவில் அமித்ஷா தலைமையில் பா.ஜ.க. பேரணி

ஐதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமித்ஷா தலைமையில் பா.ஜ.க. பேரணி நடைபெற்றது.
அமித்ஷா
Published on: 

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) முறைகேடு தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி ராகுல்காந்தி தலைமையில் இந்தியா கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது.

பா.ஜ.க.

இந்தியா கூட்டணி நடத்திய பொதுக்கூட்டத்துக்கு போட்டியாக பா.ஜ.க. “ஜனநாயகத்தை பாதுகாப்போம் அராஜகத்தை ஒழிப்போம்” என்ற பெயரில் பேரணியை நடத்தி வருகிறது.

ஐதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமித்ஷா தலைமையில் பா.ஜ.க. பேரணி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின், ஜே.பி.நட்டா ஆகியோர் தலைமையில் வெவ்வேறு மாநிலங்களில் பேரணி நடந்தது.

அமித்ஷா

இந்தநிலையில் அமித்ஷா தலைமையில் “ஜனநாயகத்தை பாதுகாப்போம் அராஜகத்தை ஒழிப்போம்” என்ற பேரணி அரியானா மாநிலம் கர்னாலில் இன்று நடைபெற்றது.

மத்திய மந்திரி மனோகர் லால் கட்டார், அரியான முதல்-மந்திரி நயாப்சிங் சைனி, ஸ்மிருதி இரானி உள்ளிட்ட ஏராளமான பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் இந்த பிரமாண்ட பேரணியில் பங்கேற்றனர்.

X