பாஜக ஆளாத மாநிலங்கள் - அதானி குழுமம் ரூ.5 லட்சம் கோடி முதலீடு!

பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் அதானி குழுமம் ரூ.5 லட்சம் கோடி முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.
பாஜக ஆளாத மாநிலங்கள் - அதானி குழுமம் ரூ.5 லட்சம் கோடி முதலீடு!
Published on

அதானி முதலீடு

தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்களில் ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை அதானி குழுமம் மேற்கொண்டுள்ளது.

பாஜகவின் ஆதரவு கரம்

மத்தியில் ஆட்சி புரிந்து வரும் பாஜகவிற்கு அதானி குழுமம் பல வகைகளில் ஆதரவு கரம் நீட்டி வருகிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர் எதிர்ப்பினைவும், அதானி குழுமத்தால் மேற்கொள்ளப்பட்டும் தவறுகளை சுட்டிக்காட்டி குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றன.

இந்த சூழலில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அதானி குழுமம் முதலீடுகளை விரிவுப்படுத்தி உள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

கேரளம் - கர்நாடகம்

அதன்படி பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 16.75 கி.மீ. நீளத்தில் அமைக்கப்படவுள்ள வடக்கு-தெற்கு சுரங்கப் பாதை பணிகளுக்கு ரூ.22,267 கோடிக்கான டெண்டா் உரிமத்தையும், மேலும் கேரளத்தில் விழிஞ்ஞம் துறைமுகத்தின் இரண்டாம் கட்ட பணிகள் மற்றும் விரிவுப்படுத்தல் ஆகிய செயல்பாடுகளுக்காக ரூ.16,000 கோடி என மொத்தமாக ரூ.30,000 முதலீட்டை அதானி குழுமம் செய்துள்ளது.

தெலங்கானா , தமிழ்நாடு

அதானி குழுமம் ஏற்கனவே தெலங்கானாவில் 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டிருக்கும் நிலையில் , புதிதாக தரவு மையங்கள், எரிசக்தி சேமிப்பு ஆகியவற்றில் புதிதாக முதலீடுகளை செய்துள்ளது.

தமிழ்நாட்டில் அதானி குழுமத்திற்கு வலுவான எதிர்ப்புகள் இருந்தாலும் , கணிசமான முதலீடுகளை அதானி குழுமம் ஈர்துள்ளது.

குறிப்பாக கடந்த திமுக ஆட்சியில் தரவு மையங்கள், சிமெண்ட் ஆலைகள் உள்ளிட்டவற்றை அமைக்க ரூ.42,000 கோடி மதிப்பிலான புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டதாக அதானி குழுமம் அறிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.

தவெக ஆட்சியிலும் நீடிப்பு

முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்ட சுங்கக் கட்டணம் , சாலை மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.2,511 கோடியில் ஒப்பந்தத்தை அதானி குழுமம் கோரியிருந்தது, இந்த வெளிப்படையான அறிவிப்பின் மூலம் தற்போதைய ஆட்சியிலும் நீடிக்கிறது என்பது தெரிகிறது.

மொத்தம் ரூ.5 லட்சம் கோடி

ஒட்டுமொத்தமாக பாஜக ஆளாத மாநிலங்களையும் சேர்த்து இந்தியா முழுவதும் ரூ.5 லட்சம் கோடி முதலீடுகளை அதானி குழுமம் மேற்கொண்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com