'குற்றவாளி எண் 4'- ஞானேஷ் குமார் மீது ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு!

வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மத்திய அரசிடம் குரல் கொடுக்க வேண்டும்.
Rahul Gandhi
Published on: 
Summary

டெல்லியில் நிலவும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணமான தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை 'குற்றவாளி எண் 4' என்று குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளார்.

வரும் நவம்பர் 1-ஆம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி சார்பில் நடைபெறவுள்ள ராம்லீலா மைதான பேரணிக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை அரசியல் களத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) மற்றும் அதற்க எதிரான தொடர் போராட்டங்களால் டெல்லியில் பொதுமக்களும் வியாபாரிகளும் சந்தித்து வரும் கடுமையான சிரமங்களுக்கு மத்திய அரசே முழுப்பொறுப்பு என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் தவறான செயல்பாடுகள் மற்றும் முறைகேடுகள் காரணமாக வர்த்தகம் பாதிக்கப்படுவதாக ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார். டெல்லியில் சாலைகள் மூடப்படுவது, மெட்ரோ சேவைகள் முடக்கப்படுவது மற்றும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது போன்ற காரணங்களால் பண்டிகைக் காலத்தில் வியாபாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளதாக வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில், வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மத்திய அரசிடம் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

டெல்லியில் நிலவும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணமான தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை 'குற்றவாளி எண் 4' என்று குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளார். அரசு இந்த நடவடிக்கையை எடுத்தால், அடுத்த 30 வினாடிகளில் டெல்லியில் நடந்துவரும் அனைத்துப் போராட்டங்களும் முடிவுக்கு வரும் என்று அவர் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

இந்த விவகாரம் குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வாக்குத் திருட்டு மற்றும் முறைகேடுகளை மூடிமறைக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகக் குற்றம்சாட்டினார். தேர்தல் முறைகேடுகள் தொடர்பான தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பதாகவும், குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் வாக்குப்பதிவு மற்றும் படிவங்களில் பெரிய அளவில் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சலோ பேரணி

ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்கும் நோக்கில், நவம்பர் 1 அன்று டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் பிரம்மாண்டமான 'டெல்லி சலோ' பேரணிக்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைக் கண்டிப்பதுடன், எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையையும் எதிர்க்கட்சிகள் தீவிரமாக முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com