ஒரே பெண்... 3 கட்சிகள்... 3 வேட்புமனுக்கள்! ராஜஸ்தானில் வித்தியாசமான அரசியல் சம்பவம்!

மூன்று முறை ஆடைகளை மாற்றி வேட்புமனு செய்துள்ளார்.
ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல்
ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல்
Published on: 
Summary

ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலில் பெண் ஒருவர் பஞ்சாயத்து வார்டு இடத்திற்கு பேட்டியிட காங்கிரஸ், பாஜக மற்றும் சுயேட்சை என மூன்று முறை மனுதாக்கல் செய்த வித்தியாசமாக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ராஜஸ்தானின் டீக் மாவட்டம், பிரிஜ் நகர் பஞ்சாயத்து சமிதி பகுதியில் வதி குமாரி என்ற பெண் இந்த வித்தியாசமான தேர்தல் வியூகத்தைக் கையாண்டுள்ளார்.

காங்கிரஸ், பாஜக சார்பில் வேட்புமனு

இவர் காங்கிரஸ் கட்சி சார்பிலும், பாஜக சார்பிலும், சுயேட்சை வேட்பாளராகவும் என மூன்று விதங்களில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்.

இதில் மேலும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு முறையும் வெவ்வேறு உடைகளில் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். முதல் முறை சேலை அணிந்தும், இரண்டாவது முறை சல்வார் சூட் அணிந்தும் வந்துள்ளார்.

சுயேட்சை வேட்பாளராக வெற்றி

ஒரு கட்சியின் வேட்புமனுவில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு நிராகரிக்கப்பட்டால், மற்றொரு வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை அவர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இறுதியில், வார்டு எண் 14-ல் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வதி குமாரி வெற்றி பெற்றுள்ளார். மேலும், பாஜகவும் அவருக்கு ஆதரவு தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரே பெண் மூன்று விதமான வேட்புமனுக்கள் தாக்கல் செய்து வெற்றி பெற்ற இந்தச் சம்பவம் ராஜஸ்தான் அரசியலில் கவனம் ஈர்த்துள்ளது.

ஒருவர் நான்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்ய சட்டத்தில் இடம் உள்ளதாம். ஆனால் ஒரு கட்சி சார்பில்தான் பிரதிநித்துவம் வழங்கப்படுமாம். அவர் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றுள்ளார்.

X