

மராட்டியத்தில் பழங்குடியின மாணவர்களுக்கான அரசு விடுதிகளில் ஏற்பட்ட மாணவர்களின் உயிரிழப்புகள் மற்றும் முறைகேடுகளைக் கண்டித்து நாசிக் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக பழங்குடியின மாணவர்கள், மாணவ அமைப்புகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்துக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 3-ந்தேதி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
மராட்டியத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அமைதியான முறையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம் ஏதோ ஒரு குறிப்பிட்ட தேர்வு அல்லது பணி நியமனம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த அமைப்பின் மீதான நம்பிக்கையே தகர்க்கப்பட்டிருப்பதுதான் காரணம்.
மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, பா.ஜனதா ஆட்சியின் கீழ் ஒவ்வொரு மாணவரும் கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.
வினாத்தாள் கசிவு, முடக்கப்பட்ட பணி நியமனங்கள், தாங்க முடியாத கல்விச் செலவு, விடுதிகளில் நிலவும் மனிதாபிமானமற்ற சூழல், நச்சுத்தன்மை வாய்ந்த உணவு, நேரடிப் பணப் பரிமாற்றத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் எனப் பட்டியல் நீள்கிறது. தங்கள் வெற்றிகரமான எதிர்காலத்திற்காக மாணவர்கள் முன்வைக்கும் ஒவ்வொரு கோரிக்கையும் நியாயமானதே. அரசு அவர்களின் குரலுக்குச் செவிசாய்த்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நீதி கிடைக்கும் வரை மாணவர்களின் இந்தக் குரல் மேலும் வலுத்துக்கொண்டே செல்லும்.
இவ்வாறு ராகுல்காந்தி கூறி உள்ளார்.